சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு அளவில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக அச்சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சந்திப்பின்போது தமது அடிப்படை பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு கிட்டவில்லை எனவும், ஒரு பிரச்சினைக்கு மட்டுமே தீர்வு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஒரு மில்லியன் ரூபா பெற்றுக் கொடுப்பதாக அமைச்சர் திரும்பத் திரும்ப கூறியதாகவும், எனினும் வைத்தியர்களது கருத்து வாகன அனுமதி பத்திரத்தின் பெறுமதியை ஒரு மில்லியனில் பூர்த்தி செய்ய முடியாது என்பதே எனவும் நலிந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே வைத்தியர்கள் அரசாங்கத்தின் மில்லியன் ரூபா கொடுப்பனவு யோசனைக்கு உடன்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.