ஹொரணை தொழிற்சாலை தீ – தற்போதைய நிலவரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹொரணை, பொரலுகொட கைத்தொழில் பேட்டையில் இன்று (13) பிற்பகல் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மதியம் ஏற்பட்ட தீ தற்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஹொரணை தீயணைப்பு பிரிவுக்கு மேலதிகமாக களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் பொரலுகொட கைத்தொழில் பேட்டைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

மேலும் இராணுவம், விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை 5 மணியளவில் கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும், தீயை அணைக்க வந்த ஒரு தீயணைப்பு வீரர் எதிர்பாராத விபத்து காரணமாக சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.