காலி மேல் நீதிமன்றத்தில் வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்ஸகுலரத்னவின் கைத்தொலைபேசி ஒலியெழுப்பியமை தொடர்பில் வழக்கு தொடர்வதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மற்றும மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் விசேட யோசனையொன்றை நேற்று ஏகமனதாக நிறைவேற்றியது.
சம்பவத்தை சமரசப்படுத்தல், வியாழக்கிழமையன்று மதியம் 12 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், மற்றும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 300 சட்டத்தரணிகள் காலி மேல்நீதிமன்றம் வரை எதிர்ப்பு பேரணியை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளடங்கியுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் குணரத்ன வன்னிநாயக்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.