புனித செபஸ்டியன்-பிரின்ஸ் ஒப் வேல்ஸ் போட்டியும் சமநிலையில் நிறைவு

புனித செபஸ்டியன்-பிரின்ஸ் ஒப் வேல்ஸ் போட்டியும் சமநிலையில் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் ‘Battle of The Golds’ சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.

மொரட்டுவ, டி சொய்சா கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர், களமிறங்கிய புனித செபஸ்டியன் அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி, இன்றைய கடைசி நாளில் 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி சமநிலையில் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.