
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் திலித்தின் நம்பிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில்முனைவோர் அரசு என்ற எண்ணக்கரு மற்றும் சர்வஜன சபையை நிறுவுவதற்கும் மிகப்பெரிய மக்கள் வரவேற்பு தற்போது கிடைத்துள்ளதாகக் சர்வஜன அதிகார கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உண்மையான மாற்றம் இந்த முறை சாத்தியமாகும் என்றார்.
திலித் ஜயவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இது நாம் எதிர்கொள்ளும் மூன்றாவது தேர்தல்.
மிகக் குறுகிய காலத்தில், முந்தைய இரண்டு தேர்தல்களை விட, இன்று நாம் நம்பும் தொழில்முனைவோர் எண்ணக்கருவிற்கும் , அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப் போகும் சர்வஜன சபையை நிறுவுவதற்கும், அதிக மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளோம்.
இந்த முறை, மக்கள் தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உண்மையான மாற்றத்தை அனுபவிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
“நல்ல பெறுபேறுகளை அடைந்து, அந்த மாபெரும் வெற்றியை இலங்கை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்