
மார்ச் 20 முதல் நிலுவைத் தொகையுடன் முதியோர் கொடுப்பனவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கிவரும் 3,000 ரூபா முதியோர் கொடுப்பனவு தொகையை, 2024 நவம்பர் முதல் காணப்படும் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர்புடைய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பெறும் முதியோர்களுக்கு குறித்த கொடுப்பனவானது நலன்புரிச் சபை ஊடாக பற்றுச்சீட்டு ஊடாக நேரடியாக அஸ்வெசும வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதற்கமைய, இதுவரை உதவித்தொகை பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மாத்திரம் மார்ச் 20 ஆம் திகதி தொடக்கம் தபால் அலுவலகம் மற்றும் உப தபால் நிலையங்கள் மூலம் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை செலுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் பின்தங்கிய பிரசேதங்களில் உள்ள பயனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் பணத்தைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.