இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த அசிந்த இந்தப் பதக்கத்தை அடைந்தார்.

இதே​வேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.03 மீ) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

COMMENTS

Wordpress (0)