அரசாங்கத்தின் சாட்சியாராக எவன் காட் தலைவருக்கு  மாற  முடியும்

அரசாங்கத்தின் சாட்சியாராக எவன் காட் தலைவருக்கு மாற முடியும்

அனைத்துத் தகவல்களையும் வெளியிட தயார் எனில், எவன் காட் ”மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்” தொடர்பான வழக்கில் அரசாங்க சாட்சியாளராக செயற்பட எவன் காட் தலைவருக்கு சந்தர்ப்பமளிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தான் உள்ளிட்ட அமைச்சர்களாக சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்கி ஆகியோர் எவன் காட் நிறுவனத்திடமிருந்து கப்பம் பெற்றுக்கொண்டதாக எவன் காட் தலைவர் ஊடகங்களின் முன்னிலையில் குற்றஞ்சுமத்தி வருகிறார்.

இதுகுறித்த பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அவப் பெயர் ஏற்படுத்தியதற்காக நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபா வருமான இழப்பினை, எவன் காட் தலைவர் நிசாங்க சேனாதிபதியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை பணத்தை எவன் காட் நிறுவனம் கொள்ளையிட்டு வந்தது, அந்த விடயங்கள் பற்றி தான் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்தப் பணம் நாட்டுக்கு கிடைக்கின்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்