
ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கம் வவுச்சர் வழங்கும் திட்டத்தில் பங்கேற்க மாட்டோம்
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்கும் திட்டத்தில் தாம் ஈடுபடப் போவதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்தனர்.
சீருடை வவுச்சர் வழங்கும் திட்டத்தில் பயனில்லை என்பதால் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்
