இருவர் போதைப்பொருளுடன் கைது

இரண்டு கிலோ கிராம் அபின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வியாபாரத்தின் முக்கிய சூத்திரதாரி இந்தியாவில் இருந்து இலங்கையில் அபின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 10 மில்லியனுக்கும் அதிகமென கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய இந்நாட்டு பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும். கைது செய்யப்பட்டவர் விடுதலை புலிகளின் முன்னால் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அயலவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.