நிசங்கவுக்கு இன்றும் புலனாய்வுப்பிரிவு அழைப்பாணை

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, புலனாய்வுப் பிரிவினால் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக  நிசங்க சேனாதிபதி அழைக்கப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரட்ன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கும் எதிராக சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விடயம் குறித்து வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர்கள் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்று பிறந்த நாளைக் கொண்டாடிய நிசங்க சேனாதிபதி, நாள் முழுவதும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்கு மூலம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.