இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் தனிநபர் தனியுரிமை இழக்கப்படும்

இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கு பெறப்படும் பிரத்தியேக தரவுகள், பிற நிறுவனங்களுக்கு கசியவிடப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகிறது.

இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக தகவல், தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் (ICTA) விசேட நோக்கத்திற்கான நிறுவனத்தை (Special Purpose Company) ஸ்தாபிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், விசேட நோக்கத்திற்கான நிறுவனத்திடம் வழங்கப்படும் தனிமனித பிரத்தியேகத் தகவல்கள் வேறு நிறுவனங்களுக்கு கசியவிடப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1968 ஆண்டு 32ஆம் இலக்க சட்டமூலத்திற்கமைய ஆட்பதிவு செய்து, தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரம் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கே உரியதாகும்.

எனினும், தற்போது வரவு செலவுத் திட்டத்திலுள்ள யோசனைக்கமைய குறித்த புதிய நிறுவனம் நிறுவப்படுமாயின் தனிநபர் தனியுரிமை இழக்கப்படும் நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.