வாகன புகைப்பரிசோதனைக் கட்டண யோசனை வாபஸ்

வாகன புகைப் பரிசோதனை கட்டணம் குறித்த யோசனை திரும்ப வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

தனியார் போக்குவரத்து பஸ்களுக்கான வாகன புகைப் பரிசோதனைக் கட்டணத்தை எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 5000 ரூபாவாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் இந்த திட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த கட்டண அறவீட்டு திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.