கிரிக்கெட் தேர்தல் வேட்பு மனுக்களின் தீர்மானம் இன்று

இலங்கை கிரிக்கெட் தேர்தலின் வேட்பு மனுக்களுக்கு எதிராக 14 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன் சந்த்ர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இன்று அறிவிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் போட்டியிடும் பிரதான இரண்டு தரப்புகளின் வேட்பாளர்கள் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக 14 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 7 தலைவர் பதவிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், இன்றைய தினம் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் முன்பாக விடயங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.