முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹபொல லொட்டரியை மலேசியப் பிரஜை ஒருவருக்கு வழங்கியதில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார்.
கொள்முதல் வழிமுறை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.