அடுத்த வருடத்தில் 3 புதிய சிவில் விமான நிலையங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் அடுத்த வருடம் மூன்று சிவில் விமான நிலையங்களை  நிர்மாணிப்பதற்கு போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளார்.

இதற்கேற்ப, புத்தளம், பதுளை மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் இந்த மூன்று விமான நிலையங்களும் அமையவுள்ளன. இதற்கான நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பாலாவியில் தற்பொழுது அமையப் பெற்றுள்ள உள்ளக விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இதன் விமான ஓடுபாதையை 1500 மீட்டர்களாக அமைப்பதற்கும் தேவையான கட்டிடங்களை அமைப்பதற்கும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்