அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளருக்கு, அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, 5 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். நம்பிக்கையை மீறி, அம்பாறை மாவட்ட நீதிமன்றத்துக்கு உரித்துடைய 2 இலட்சம் ரூபாயைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அவருக்கு 6 இலட்சம் ரூபாய் தண்டம்விதித்த நீதிபதி, அத்தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறின், இன்னுமிரண்டு வருடசிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்..
நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளருக்கு 5 வருடக் சிறை