யாழ்.நகரில் நடு வீதியில் பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது மகனைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறியழுதவாறு தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியம் அளிக்கும்போதே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறினார்.
“இராணுவப் புலனாய்வாளர்களும், ஈ.பி.டி.பியினரும்தான் எனது மகனைக் கடத்தி காணாமல் ஆக்கச் செய்தனர் என்று நான் பின்னர் அறிந்தேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.