ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரது முகத்தில் குத்திய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், மரியானா ரஜோய் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், பான்டேவேட்ரா நகரில் அவர் புதன்கிழமை நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரை நெருங்கிய 17 வயது இளைஞர், யாரும் எதிர்பாராத வகையில் ரஜோயின் முகத்தில் பலமாகக் குத்து விட்டார். இதில், ரஜோய் அணிந்திருந்த கண்ணாடி விழுந்து நொறுங்கியது
இதில் பிரதமருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், பிரதமரைக் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.