சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்றவர்களை பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம், அல்பிட்டிய தெலிகட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வான் ஒன்றில் மாடுகளை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர்.
எனினும், வாகனத்தை நிறுத்தாத காரணத்தால் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தி நால்வரை மடக்கிப்பிடித்ததோடு,இரண்டு மாடுகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை, இருவர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் கடவுச் சொல்லை (password) உடனடியாக மாற்ற அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின்…
ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வருடம் வெளிவந்த பாகுபலி திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது பாகுபலி–2ல் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுடனும் ஒரு தெலுங்கு…
மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில்…