தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களில் குறைபாடுகள்

ஆட்பதிவுத் திணைக்களம் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடுகின்றது.

பல விண்ணப்பங்களில் பாடசாலை அதிபர்கள் கையொப்பமிட்டுள்ளபோதிலும், அவர்களின் உத்தியோகபூர்வ முத்திரை பொறிக்கப்பட்டிருக்கவில்லை என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் கூறுகின்றார்

இதுவரை சுமார் 2500 க்கும் அதிகமான விண்ணப்பங்களில் குறைபாடுகள் நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்