யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிராந்தியங்களிலுள்ள இரண்டு பிரதான வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளின் நலன் கருதி தேவையான தளபாடங்களை சமீபத்தில் DFCC வங்கி வழங்கியுள்ளது.
அதன்படி யாழ். போதனா வைத்தியசாலைக்கு முக்கிய தேவையாக இருந்த 30 சக்கர நாற்காலிகளை வங்கியின் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரியினால் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
இத்துடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் வெளிநோயாளர்களின் இருப்பிட வசதிக்காக 200 கதிரைகளையும் வங்கி வழங்கியது. இதன் மூலம் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் எதிர்கொண்டிருந்த இருக்கை வசதிக்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.