கத்தி படத்தை அடுத்து விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள என்ற படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இன்னும் பெயர் வைக்கபடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் ஆண்களுக்கு எப்படி சிக்ஸ் பேக் வைப்பது பெருமையோ அதே போல் பெண்களுக்கு ஜிரோ பேக் இருப்பது பெருமை அதற்காக கடுமையான டயட்டில் இருந்து வந்தார் சமந்தா. படபிடிப்புக்காக ஐதராபாத் செல்லும் போதும் டயட்டை கடைபிடித்து வந்தார்.
ஆனால் அந்த டயட்டை சென்னை வந்தால் மட்டும் கடைபிடிக்க முடியவில்லையாம் சமந்தாவால் காரணம் அவர் சென்னை என்பது, அதோடு இங்கு கிடைக்கும் இட்லி, பொங்கல், வடை, தோசை அடிமையாகிவிட்டதால் அதை பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிடுகிறது என்று சமந்தாவே அவரது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.