அ.இ.ம. காங்கிரஸ் ரிஷாத்தும் முஸ்லிம் காங்கிரஸ் யஹியாக் கானும் சந்திப்பு

பம்பலபிட்டி ஹோட்டல் ஒன்றில் அண்மையில் எதிர்பாரா விதமாய் சந்தித்த யஹ்யா கானிடம் ரிஷாத் அவரை அ.இ.ம.காங்கிரஸில் வந்து இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார். தனது கட்சித் தலைவரை சந்தித்து சில விடயங்களைப் பேசிய பின் அதைப்பற்றி கலந்துரையாடலாம் என பதில் பறந்து வந்தது.

சித்தீக் காரியப்பர் இதைப்பற்றி எழுதும் போது, யஹியாக்கான் – முஸ்லிம் காங்கிரஸில் சீனியர் எனக்கூறிக்கொள்வோரால் ஓரங்கட்டப்படுவதாகவும். தனது பொறுப்புக்கள் பதவிகள் குறைக்கப்பட்டுள்ளன எனவும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரிக்க தனது ஆதரவாளர்களும் காரணம் எனவும் கூறியுள்ளார்.

விரைவில் தலைமையைச் சந்தித்து பேசவுள்ளேன். திருப்தியில்லாவிடின் கட்சியில் தொடர்ந்தும் இருக்க மாட்டேன். ஆனால் அரசியலில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அமைச்சர் ரிஷாதுக்கு கிடைத்த 33 ஆயிரம் வாக்குகளும் அவருக்காக அளிக்கப்பட்டவையே. இதனை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும் அமைச்சர் ரிஷாத் எதனையும் செய்யக் கூடிய துணிச்சல் மிக்கவர். கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.