ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை நேற்று(22) அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் கடந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த கீதா குமாரசிங்கவுக்கு காலி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டு, தற்போது அவருடைய கடும் அரசியல் எதிரியாக செயற்படும் சிறிபால கம்லத்துக்கு பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவியானது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியின் அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியாகும்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் மாவட்டங்களின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.