பொருத்தமற்ற இடங்களில் நத்தார் தாத்தாவின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
மதுபானசாலை போன்ற பொருத்தமற்ற வியாபார நிலையங்களில் இந்த புகைப்படத்தைப் பயன்படுத்தி மக்களை கவர முயற்சிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதுபோன்ற இடங்களில் நத்தார் தாத்தாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் காலத்தில் தாத்தா வேடத்தில் ஆடை அணிந்து ஏழை பிள்ளைகளுக்கு பரிசு வழங்குவதையே நோக்காகக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று அந்த ஆடை அணிந்து கொண்டு பல தரத்தினரும் வியாபாராம் செய்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.