மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

உலகிற்கு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இன்றைய தினம் அனைவரும் அர்ப்பணிப்படன் செயற்படுவது நபிகள் நாயகத்திற்கு வழங்கும் கௌரவம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடும், மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகாலமாக நிலவும் சகோதரத்துவத்தை பகிர்ந்துகொள்வதன் ஊடாக, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம் தலைமையில், தேசிய மீலாதுன் நபி விழா இன்று கண்டியில் நடைபெறவுள்ளது. கண்டி பொல்கொல்ல கூட்டுறவு பயிற்சி மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.