கூட்டு எதிர்க்ட்சியின் நால்வர் ஆளும் கட்சியில்

கூட்டு எதிர்க்கட்சியின் நான்கு பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் மஹிந்தவிற்கு விசுவாசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பவித்ரா வன்னியாரச்சி, லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் மனுச நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நல்லாட்சி அரசாங்கத்துடன் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு பேரைத் தவிர வேறும் சிலரும் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.