2015ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வேலையில்லா விகிதம் நூற்றுக்கு 5 வீதம் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறுகின்றது.
இலங்கை தொழிலாளர்கள் படை ஆய்வு அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட வேலையில்லா விகிதம் நூற்றுக்கு 22.9 வீதம் என தெரியவந்துள்ளது.
தொழிலாளர்கள் படை ஆய்வு அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதார ரீதியாக செயல்மிக்க மக்கள் தொகை 9 மில்லியன்கள் என்பதுடன் அவர்களில் 64.5 வீதமானோர் ஆண்களாவர்.
2015ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்காக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி தொழில் செய்யக் கூடிய நபர்களின் எண்ணிக்கை 8.5 மில்லியன்கள் என்பதுடன், அதில் 45.5 வீதம் சேவைத் துறை, 27.2 கைத்தொழில் துறை மற்றும் 27.4 விவசாயத் துறைகளில் தொழில் செய்யக் கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையின் படி வேலை செய்யக் கூடிய மக்கள் தொகையில் 67 வீதமானோர் வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வேலை செய்யக் கூடியவர்கள் என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.