யசீர் சாஹ்விற்கு தடை

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் சாஹ் விற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை  போட்டி தடைவிதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துடன், அபுதாபியில் இடம்பெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியைத் தொடருந்து, அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தற்காலிக  போட்டி தடையை அமுலாக்கியுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில், இந்த வருடத்துக்கான சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் அணியில் யசீர் சாஹ் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
அதேநேரம் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் ஜனீத் பெரேராவுக்கும் இதே குற்றத்துக்காக  போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.