சமூக வலைத்தளங்களில் றிசாட் பதியுதீனை நடிகராக அபாண்டமளிப்பது வரலாற்று துரோகமாகிவிடும்.

நாம் எல்லோரும் அறிந்த ஒரு விடயம்தான் 1990இல் வடமாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட விடயம்.உடுத்த உடுப்புடன் அவர்களை வெளியேற்றிய போதும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீள்குடியேறுகின்றனர்.வெறும் மீள்குடியேற்றம் என்ற வகைக்குள் அதனை அடக்கிவிட முடியாது.

இதனையும் தாண்டி முஸ்லிம்களின் பூர்வீகம்,பண்பாடு,கலாச்சாரம், வாழ்வியல் உரிமைகள் என்பன அடங்கியுள்ளது. உடமைகளையும் பூர்வீகத்தையும் இழத்தல் என்பதனையும் தாண்டி அப்பிரதேச அம்மக்களின் வரலாறு பண்பாடு பூகோள தொடர்பு நிலைகள் என்பன முக்கியத்துவம்
பெறுகின்றது. இந்நிலையில் அம்மக்கள் இழந்த அனைத்தையும் மீளக்கொண்டுவருதல் என்பது
சிறுபான்மையாக வாழும் இலங்கையில் மிகவும் கடினமானதும் நீண்டகாலச்
செயன்முறையாகும்.

இதில் வடமாகாண முஸ்லிம்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவர் றிசாட் பதியுதீன்
என்பது சொந்த விருப்புக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையாகும். இந்நிலையில் மீள்குடியேற்றத்தை
இனவாதமாக சித்தரிக்கும் மூன்றாவது நாடகம் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்
வேளையில் முதலிரண்டு தடவைகளிலும் றிசாட் பதியுதீன் அம்மக்களின் வலிகளையும் அம்மக்களுக்கான கடமைப்பாட்டையும் இலங்கை சட்டத்திற்குள் அடக்கி இலங்கை மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.

இன்னும் அந்த இனவாதம் ஓய்ந்தபடியாக இல்லை. இந்த இனவாதக் கருத்துக்களுக்கு பதிலிடும்
வகையில் ஹிரு டீவியில் ஏற்பாடாக இருக்கும் விவாதம் இருக்க வேண்டும் என்பதே
எல்லோரினதும் விருப்பமாகும். வில்பத்துவின் ஒரு அங்குல நிலமேனும் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ளடங்காத போதும் மறிச்சுக்கட்டியை வில்பத்துக்குள் சேர்க்கும்
இனவாதத்திற்கு எதிராக குறைந்தபட்சம் பிரார்த்தனையாவது நாம் செய்ய வேண்டும்.அவ்
இனவாத கருத்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களின் உரிமைக்காக உழைப்பவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யால் இருக்க வேண்டும்.

இலங்கை பண்ணைடைய காலத்தில் யானைக்கும் முத்துக்கும் பெயர்பெற்றது.கிட்டத்தட்ட
இரண்டாயிரம் வருடங்களாக இத்தொழில்கள் இலங்கையில் நடைபெற்று வந்துள்ளன. இதில்
இந்த இரண்டு தொழிலையும் முஸ்லிம்களே செய்து வந்துள்ளனர்.முத்துக் குளித்தலும்
யானை பிடித்தலும் மறிச்சுக்கட்டி அடங்கலான முசலிப் பிரதேசத்திலே இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் தொன்மையான வரலாற்றினை கொண்டவர்கள் முஸ்லிம்கள்.காலங்காலமா அழிக்கப்பட்டும் மறைக்கட்டும் வந்த சோனகர்களின் தொன்மை இன்றும் மறைக்க முயற்சிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் றிசாட் பதியுதீனின் அம்மக்களுக்கான குரலிற்கு எல்லோரும்
ஆதரவளிப்பது கடமையாகும்.இதனை விடுத்து சமூக வலைத்தளங்களில் றிசாட் பதியுதீனை
நடிகராக அபாண்டமளிப்பது வரலாற்று துரோகமாகிவிடும்.வருங்காலமும் எம்மை
ஏசும்.ஆகவே உதவா விட்டாலும் பரவாயில்லை; உபத்திரமாவது செய்யாமலிருக்கும் மனநிலையை இறைவன் அனைவருக்கும் ததந்தருள்வானாக.,