ஜப்­பானில் பாலியல் அடிமைகலுக்கு தீர்வு கிட்டுமா?

ஜப்­பானில் பாலியல் அடி­மை­க­ளாக தென் கொரிய பெண்­கள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் உல­கப்போர் காலத்தில், கொரியப் பெண்­களை ஜப்பான் பாலியல் அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­தமை தொடர்பில், இரு நாடு­க­ளுக்கும் இடையே மிக­நீண்ட கால­மாக மனக்கசப்பு நிலவிவருகிறது.

கொரிய மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ஜப்­பா­னிய இரா­ணு­வத்தின் கூடாரங்களில் பாலியல் அடி­மை­க­ளாக பல­வந்­த­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர்.சுமார் 200,000 இலட்சம் பெண்கள் வரை இவ்வாறு பாலியல் அடிமைகளாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலர் தென் கொரியப் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இப்பெண்களிடம் ஜப்பான் மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் , அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படவேண்டுமெனவும் தென் கொரியா கோரி வருகின்றது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக பல்வேறு முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. அதாவது ஜப்பான் இவ்விடய த்தில் ஏற்கனவே மன்னிப்புக் கோரிவிட்ட தாகவும் , மேலும் நட்ட ஈடும் வழங்கி விட்ட தாகவும் ,இது பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் , குறித்த பெண்கள் அக்காலத்தில் வழங்கப்பட்ட அதிக ஊதியத்துக்கு ஆசைப்பட்டே பாலியல் அடிமைகளாக இருந்ததாக வேறு சில தகவல்களும் வெளியாகியிருந்தன.

இந்­நி­லையில் இந்தப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்­டு­வர, ஜப்பான் வெளியுறவுத்­துறை அமைச்சர் புயுமோ கிஷி­டா­வுக்கு, ஜப்­பா­னியப் பிர­தமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இச்­சர்ச்சை தொடர்பில் 831,877 டொலர் செல­வி­லான கூட்டு நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்­ப­டுத்­த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்­நி­லையில், கிஷிடா இன்று தென் கொரியா செல்­கிறார், மேலும் இது­தொ­டர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இப்­பி­ரச்­சினை தொடர்பில், முன்னர் ஜப்பான் கோரி­யி­ருந்த மன்­னிப்­புவெளிப்படையாக இல்லை மற்றும் முன்னர் வழங்கப்பட்ட நட்ட ஈட்டுத் தொகை போதிய அளவில் இல்லை என தென் கொரியா தெரி­வித்­துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் யென்களை ஜப்பான் தர இணங்கியுள்ள போதும் , தென்கொரியா சுமார் 1 பில்லியன் யென்களை கோருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது இடம்பெறவுள்ளபேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.