ஆசிரிய பயிற்சி நெறிக்கு இறுதி நாள் இன்று

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இந்த வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று (28) திங்கட்கிழமை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி, சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்து சமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ், வணிகம், உடற்கல்வி, உள்ளிட்ட 22 பாடநெறிகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும்