அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில்

அவன்ட் கார்ட் ஆயுத கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக காலி கடற்பரப்பிற்கு 12 கடல் மைல் தொலைவில் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் கப்பலொன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்தக் குறித்த ஆயுதக் கப்பல் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் அவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக போலியான தகவல்களை வழங்கியிருந்தது.

கடற்படையினர் குறித்த கப்பலை சோதனையிட்ட போது போலித் தகவல்களை வழங்கியமையும் தெரியவந்தது.

இன்னும், பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர்.

வெகு விரைவில் இரண்டு விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)