2016ல் ஐ.எஸ் தீவிரவாதத்தை முற்றாக அழிப்போம் – ஹைதர் அல் அபாடி

2016ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார்.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார்.

ஐஎஸ்-ன் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை கைப்பற்றிய பிறகே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வருகிற 2016–ல் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள், அதுவே அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமையும். தற்போது ரமாடியை நமது ராணுவம் கைப்பற்றி உள்ளது. நமது அடுத்த இலக்கு மிகப்பெரிய நகரமான மொசூலை மீட்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரமாடியை கைப்பற்றியுள்ளது ஈராக் ராணுவத்தினருக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.