க.பொ.த உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழிநுட்ப(ENGINEERING TECHNOLOGY)
துறையில்
ஏறாவூர் பற்று மீராகேணியைச் சேர்ந்த அப்துல்லாஹ் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் ஐந்தாவது
இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 224 வது இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு
தெரிவாகியுள்ளார்.
Index Number : 6799248
Stream : ENGINEERING TECHNOLOGY
Z-Score : 1.8562
District Rank : 5
Island Rank : 224
சாதாரண குடும்பத்தை சேர்ந்த இம்மாணவன் தான் தெரிவு செய்த பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவு ஏறாவூர் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப் படாத காரணத்தினால் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு சென்று குறித்த துறையினை தெரிவு செய்ததுடன் தனது கல்விக்கு தேவையான செலவுகளை பாடசாலைக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது நெய் கலன்களை கொண்டு சென்று, மட்டக்களப்பு உணவகங்களில் விற்பனை செய்து பெறப்படும் வருமானத்தில் ஈடு செய்து கொண்டார்.
சிறந்த அத்லட்டிக் வீரரான இவர் தேசிய , மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.