பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை குவித்தது.
தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 37 பந்தில் 57 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார்.
அதே போல் ஹெட் 31 பந்தில் 51 ஓட்டங்களும் (3 சிக்சர், 1 பவுண்டரி), ஹாட்ச் 15 பந்தில் 30 ஓட்டங்களும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் அணி களம் இறங்கியது.
ஆனால் அடிலெய்டு அணியின் அபார பந்து வீச்சால் பெர்த் அணி 17.3 ஒவரில் 138 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக டேவிட் வில்லி 31 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டு அணியின் ரஷித் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.