எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக புதியதோர் கட்சியினை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ ஆட்சியின் அமைச்சர்கள் , முன்னாள் முதல்வர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும், அவ்வாறு ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியின் சின்னமாக பூக்கூடை சின்னம் யோசனைக்கு முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த கலந்துரையாடலில் அநேகரின் யோசனையானது தாமரைப்பூ சின்னம் தற்போதைய நிலவரத்தின் படி சிறந்த சின்னம் எனவும் முன்வைக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.