பெண் நிருபரிடம் கிறிஸ் கெய்ல் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் கெய்ல் விளையாடி வருகிறார்.
இதில் நேற்று முன் தினம் பேட்டி எடுக்க வந்த அவுஸ்திரேலியா தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிரூபர் மெக்மெக்லின் அழகை வர்ணித்து தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதனால் அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விடயத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.
இது பற்றி அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் விளையாடி வரும் ஜெயவர்த்தனே கூறுகையில், ”அந்த பெண் நிரூபரிடம் கெய்ல் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை.
கெய்லை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் எப்போதும் வேடிக்கையாக நடந்து கொள்வார். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் மற்றவர்கள் அதே போன்று இருக்க மாட்டார்கள்.
அதே சமயம் அது போன்ற செயலுக்கு ஏற்ற இடம் இது இல்லை என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். நடந்தது நடந்துவிட்டது. அந்த விடயத்தை மறந்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.