தினமும் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கான மற்றுமொரு காரணம்

தினமும் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கான மற்றுமொரு காரணம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருபது ஜோடிகளுக்கு மத்தியில் முத்தத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது அவர்களது எச்சிலை வைத்து சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த முத்த ஆய்வின் போது ஜோடிகள் அனைவரும் பத்து நொடிகளுக்கு மேலாக முத்தமிட்டுக் கொள்ளும்படி அறிவுரைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின் போது கிடைத்த வினோத தகவல் என்னவெனில், தெரிந்த நபருடன் இன்றி, அந்நியருடன் முத்தமிட்டுக் கொள்ளும் போது பெரியளவில் நல்ல பாக்டீரியாக்கள் பரவுவது இல்லை என்பது தான். இந்த ஆய்வின் போது ஏறத்தாழ 75 மில்லியன் அளவு ஆரோக்கிய பாக்டீரியாக்கள் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது…

ஆர்வமும் நேரமும் முக்கியம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் முத்தமிடும் போது எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் பரவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் நிறைய வேறுபாடுகள் தெரிவது கண்டறியப்பட்டது.