அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில் டேவிட் வார்னர் மனைவி 2வது பிரசவத்துக்காக பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் வார்னர் ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.