கடந்த ஜனவரி 4ம் திகதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படும் 5 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு அதில் 6 சந்தேக நபர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் குறித்த சந்தேக நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 4ம் திகதி இடம் பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதுடைய நபரின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் எம்பிலிப்பிட்டிய பொது மயானத்தில் இடம் பெற்றிருந்தது.
அவரது மரணம் காவற்துறை தாக்கியதால்தான் நிகழ்ந்தது என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது