பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்துவதாக கூறப்படும் கோப்பி பொதிகள் – சுவிங்கம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கோப்பி பொதிகள் மற்றும் சுவிங்கம் விசேடமான பாலியல் விடயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவை சந்தைக்கு அனுப்புவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நீர்கொழும்பு நஞ்சு மருந்துகள் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஓர் 50 ஆயிரம் ரூபா பிணையிலும் ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.