அரசியலமைப்பு பேரவை அமைப்பது குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது.
அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவை குறித்த யோசனை அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் இந்த விசேட விவாதம் நாடாளுமன்றில் நடத்தப்படவுள்ளது.
இந்த யோசனை கடந்த சனிக்கிழமை பிரதமரினால் முன்வைக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியினர் கருத்து வெளியிட சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
அரசியலமைப்பு குறித்த எதிர்க்கட்சியினருக்கு கருத்து வெளியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று நாடாளுமன்றில் விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.