சட்டம் ஒழுங்கு மாணவியை பாதுகாக்குமா??

பாடசாலைக்கு சென்ற மாணவியை முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் வழிமறித்துள்ளதுடன் அம்மாணவியின்  சீருடையை கிழித்துள்ளனர். லிந்துலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில்   தரம் 9 இல் கல்வி பயின்று வரும் மாணவி, வழமை போன்று நேற்று (11) பாடசாலைக்கு செல்லும்போது, முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் அம்மாணவியை வழிமறித்துள்ளதுடன் மாணவி அணிந்திருந்த சீருடையையும் கிழித்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் லிந்துலை பொலிஸில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர். மாணவி இன்று காலை  பாடசாலைக்கு வரும்போதும், முச்சக்கர வண்டியில் வந்த அதே குழுவினர் மாணவியை  வழிமறித்துள்ளதுடன்  மீண்டும்  சீருடையை கிழித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.