
ஒன்றாய் திரியும் ஆடும் புலியும்
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில், உள்ள அமூர் என்ற புலிக்கு உணவிற்காக ஒரு ஆட்டை பூங்கா ஊழியர்கள் புலியின் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த ஆட்டை கொன்று உணவாக சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை உற்ற நண்பனாக ஏற்றுக் கொண்ட புலி தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக இரண்டும் ஒன்றாக சுற்றித்திரிகிறது. இதை அங்குள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
