பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர் நெய்மர். கடந்த 2013–ம் ஆண்டு இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக மாறினார்.

இதற்கு வழங்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஸ்பெயின் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிப்ரவரி 2ம் திகதி நெய்மர் மற்றும் அவரது பெற்றோர் ஆஜராக வேண்டும் என்று ஸ்பெயின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.