இலங்கை அணி வீரர் திஸர பெரேரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரே, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு விரும்புவதாக, இலங்கை கிரிக்கெட் சபையிடம் விண்ணப்பித்துள்ளார்.
26 வயதான திஸர பெரேரா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 110 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 42 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.
எனினும், அண்மைக்காலமாக இலங்கைக்காகத் தெரிவுசெய்யப்படாத இவர், இதற்கு முன்னர் காணப்பட்ட சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவால், மோசமான உடற்தகுதிக்காகத் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்.
இதற்கு முன்னரும் ஓய்வுபெற முயன்ற போதிலும், தேர்வாளர்களாலும் கிரிக்கெட் சபையாலும் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.