
மஹிந்தவின் மகனினால் பேஸ்லைன் வீதியில் மேற்கொண்ட கார் விபத்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மகனினால் மேற்கொள்ளப்பட்ட கார் விபத்து பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
2014 ஆண்டு மே மாதம் 1ம் திகதி நாரஹென்பிட்டி பேஸ்லைன் வீதியில் இலக்கத்தகடற்ற கார் ஒன்று அதிக வேகமாக சென்று முச்சக்கர வண்டியில் மோதுண்டு ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் எனத் தெரிய வந்துள்ளது.
போர்ட் ரக வாகனமென்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் உடனடியாக அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
வாகனத்தில் மோதுண்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு முன்னதாகவே மஹிந்தவின் மகனது வாகனம் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்படவில்லை எனவும், கடுவெல வாகனம் திருத்தும் இடமொன்றுக்கு எடுத்துச்சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
