பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டிருந்த யூ டூயூப் இணையத்தளத்தின் தடை நேற்று நீக்கப்பட்டது.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இஸ்லாம் மதத்திற்கு அவதூறாக காணொளி ஒன்றினை குறித்த இணையத்தளத்தில் வெளியிட்டமையின் காரணமாக தடைசெய்யப்பட்டிருந்தது.
அமெரிக்கா தயாரிப்பாளரினால் இந்தக் குறித்த காணொளி தயாரிக்கப்பட்டது.
இதனால் அங்கு பாரிய எதிர்ப்பு நிலை ஒன்று ஏற்பட்டு, 12 பேர் பலியானார்கள்.
இந்த தடையை நீக்கியதன் பின், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரி தெரிவிக்கையில், கூகுல் இணையத்தளதிற்கு சொந்தமான யூ டூயூப் இணையத்தளம் பாகிஸ்தானில் விசேட மாதிரி அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.